Published : 19 Sep 2021 03:13 AM
Last Updated : 19 Sep 2021 03:13 AM

சென்னையில் தனியார் கல்லூரி ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.2,000 கோடி மதிப்பிலான 91.4 ஏக்கர் நிலம் மீட்பு

சென்னை செம்மஞ்சேரியில் பொறியியல் கல்லூரியின் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.2,000 கோடி மதிப்பிலான 91.4 ஏக்கர் நிலம் நேற்று மீட்கப்பட்டது. இந்த இடத்தைப் பார்வையிட்ட வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், மாநிலம் முழுவதும் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என்று தெரிவித்தார்.

செம்மஞ்சேரியில் உள்ள பொறியியல் கல்லூரியால் கடந்த 20 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்ட அரசுக்கு சொந்தமான 91.4 ஏக்கர் நிலம் தொடர்பாக கடந்த 2013 முதல் சட்டப்பூர்வ நடவடிக்கையை தமிழக அரசு எடுத்து வந்தது.

இதுதொடர்பாக தமிழக வருவாய்த் துறைக்கு சாதகமான உத்தரவுகள் வந்ததைத் தொடர்ந்து, நேற்று காலை சென்னை மாவட்டஆட்சியர் விஜயராணி, தமிழ்நாடு நில மேம்பாட்டு ஆணையர் நாகராஜ் ஆகியோர் தலைமையில், வருவாய்த் துறையினர்நிலத்தை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினர்.

தொடர்ந்து, அந்த இடத்தில் ‘அரசுக்கு சொந்தமான நிலம்’என்ற பெயர்ப் பலகையும் வைக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளின் நடவடிக்கையை, வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர்ராமச்சந்திரன், சுகாதாரத் துறைஅமைச்சர் மா.சுப்பிரமணியன்,தென் சென்னை எம்.பி. தமிழச்சிதங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ்ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறியதாவது:

20 ஆண்டு சட்டப் போராட்டம்

கடந்த 20 ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தி, முறையான நீதிமன்ற உத்தரவின்பேரில் இந்த91.4 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதில் தங்கியுள்ள மாணவிகளை வேறு இடத்துக்கு முறையாக மாற்றிய பிறகு, கட்டிடம் இடிக்கப்படும். தற்போது இந்தஇடத்தின் மதிப்பு ரூ.2 ஆயிரம் கோடியாகும்.

அரசின் பல திட்டங்களுக்கு பயன்படுத்த நிலம் இல்லாத சூழலில், இந்த இடம் அதற்காக பயன்படுத்தப்படும். அரசு விரைவாகவும் நேர்மையாகவும் செயல்பட்டு இதுபோன்ற நிலங்களை மீட்டு மக்கள் பயன்பாட்டுக்கு சேர்த்து வருகிறது.

முதல்வர் உத்தரவின்பேரில், தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பு நிலங்கள் கண்டறியப்பட்டு மீட்கும்நடவடிக்கையில் வருவாய்த் துறைஇறங்கியுள்ளது.

அதேபோல, குத்தகைக்கு வழங்கப்பட்ட நிலங்கள், குத்தகையில் குறிப்பிட்ட பயன்பாடின்றிவேறு விஷயங்களுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் பட்சத்திலும், சந்தை மதிப்புக்கு ஏற்ப குத்தகை தொகை இல்லாத பட்சத்திலும் அவற்றை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x