

தமிழகத்தில் அக்டோபரில் நடக்கஉள்ள ஊரக உள்ளாட்சி தேர்த லுக்காக 20 ஐஏஎஸ் அதிகாரிகளை பார்வையாளர்களாக நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் இதர மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் கடந்த13-ம் தேதி அறிவித்தது. அக்டோபர் 6, 9-ம் தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்க உள்ளது. 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
இதற்கிடையே, இத்தேர்தலுக் காக மாவட்ட வாரியாக 20 ஐஏஎஸ்அதிகாரிகளை தேர்தல் பார்வையாளர்களாக நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
புதிதாக தேர்தல் நடத்தப்படும் 9 மாவட்டங்களை பொருத்தவரை, காஞ்சிபுரம் - வே.அமுதவல்லி, செங்கல்பட்டு - வா.சம்பத். விழுப்புரம் - கே.எஸ்.பழனிசாமி, கள்ளக்குறிச்சி - கே.விவேகானந்தன், வேலூர் - சா.விஜயராஜ்குமார்,ராணிப்பேட்டை - சோ.மதுமதி,திருப்பத்தூர் - சி.காமராஜ், திருநெல்வேலி - ஜெ.ஜெயகாந்தன், தென்காசி - பொ.சங்கர் ஆகியஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதர மாவட்டங்களில் காலியாகஉள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடக்க உள்ளன. அந்த வகையில், கோவை, நீலகிரி -மா.மதிவாணன், திருவள்ளூர், திருவண்ணாமலை - அ.ஞானசேகரன், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி - த.ந.ஹரிஹரன், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் - அனில்மேஷ்ராம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் - சி.நா.மகேஸ்வரன், நாகப்பட்டினம், திருவாரூர் -இரா.செல்வராஜ், மதுரை, தேனி,திண்டுக்கல் - கா.பாஸ்கரன், சிவகங்கை, விருதுநகர் - மு.கருணாகரன், ஈரோடு, திருப்பூர், நாமக்கல் - சு.சிவசண்முகராஜா, திருச்சி, கரூர், புதுக்கோட்டை - சு.கணேஷ், கடலூர், மயிலாடுதுறை - இரா.நந்தகோபால் ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வேட்புமனு தாக்கல் நிறைவடையும் நாளான செப்.22-ம் தேதி இவர்கள் அனைவரும் அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று தேர்தல் கண்காணிப்பு பணியை தொடங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
20,074 வேட்புமனுக்கள் தாக்கல்
ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு கடந்த 15-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. கடந்த 4 நாட்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 16,420 வேட்புமனுக்கள், கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு 3,243, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 385, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 26 என மொத்தம் 20,074 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.