

தென்தமிழகத்தில் முதன் முறையாக திருநங்கைகள் உணவகத்தை, மதுரை கோரிப் பாளையம் பனகல் சாலையில் ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்த உணவகத்தில் 12 திரு நங்கைகள் பணிபுரிகின்றனர். உணவுப் பொருள் விலையும் சாமானிய மக்கள் சாப்பிடும் வகை யிலேயே உள்ளது.
இந்த உணவகத் திறப்பு விழா வில் ஆட்சியர் பேசுகையில், திரு நங்கைகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு அனைத்து உத விகளையும் செய்யும் என்றார்.
விழாவில் மாவட்ட சார்பு நீதிபதி தீபா பேசியதாவது: இந்தியாவிலேயே முதன்முறை யாக லோக்அதாலத் உறுப்பின ராக திருநங்கையை, மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் தலைவராகச் செயல்படும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி நியமித்துள்ளார்.
சட்டம் மற்றும் சட்டம் சாராத எந்த உதவியாக இருந்தாலும், மாவட்ட நீதிமன்றத்தில் செயல்படும் சட்ட உதவி மையத்தை திருநங்கைகள் நாடலாம். அவர்களுக்கு வாதாடுவதற்கு கட்டணமின்றி வழக்கறிஞர்கள் நியமனம் செய் யப்படுவர் என்றார்.
இந்நிகழ்ச்சியில், ரெட் கிராஸ் சங்க நிர்வாகி வழக்கறிஞர் முத்துக் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருநங்கைகள் பிரியாபாபு, ஜெயசித்ரா மற்றும் திருநங்கைகள் ஏற்பாடுகளைச் செய்தனர்.