Last Updated : 20 Feb, 2016 09:36 AM

 

Published : 20 Feb 2016 09:36 AM
Last Updated : 20 Feb 2016 09:36 AM

சாதுக்கள் தரிசனம் பாவ விமோசனம்: துறவிகள் மாநாட்டில் சிவஞான தேசிகர் கருத்து

சாதுக்களை தரிசனம் செய்தால் பாவ விமோசனம் கிடைக்கும் என உளுந்தூர்பேட்டை அப்பர் சுவாமிகள் மடத்தைச் சேர்ந்த சிவஞான தேசிகர் தெரிவித்தார்.

கும்பகோணம் கோவிந்தபுரத்தில் உள்ள பாண்டுரங்க ஆசிரமத்தில் நடைபெற்றுவரும் அகில பாரத துறவிகள் மாநாட்டின் 2-ம் நாள் நிகழ்ச்சிகள் நேற்று காலை உடுமலை செந்திலின் பரதநாட்டிய நிகழ்ச்சியுடன் தொடங்கின.

தொடர்ந்து, மாநாட்டு மலரை பெரம்பலூர் பிரம்மரிஷி மலை அன்னை சித்தர் ராஜ்குமார் சுவாமிகள் வெளியிட, சென்னை ராமகிருஷ்ண மடத்தின் மேலாளர் சுவாமி விமூர்த்தானந்தர் பெற்றுக் கொண்டார்.

மாநாட்டில் சிவஞான தேசிகர் பேசியபோது, “மகாமக விழாவின் சிறப்பே சாதுக்களும், துறவி களும் பங்கேற்றுள்ளதுதான். கோயில்களில் 10 நாள் உற்சவத்தில் சுவாமிகள் நமக்கு காட்சி தருவது போல, ஞானிகள் மற்றும் முனிவர்கள், உணவில்லாமல் தன்னை மறந்து பெற்ற தவத்தை நமக்குத் தருகிறார்கள். அப்படிப்பட்ட சாதுக்களை நாம் தரிசனம் செய்தால் பாவ விமோசனம் கிடைக்கும்.” என்றார்.

மாநாட்டில் 800-க்கும் மேற்பட்ட துறவிகள் கலந்துகொண்டனர். இந்த மாநாடு இன்றுடன் (பிப்ரவரி 20) நிறைவு பெறுகிறது.

மாநாடு தொடங்குவதற்கு முன்பாக ஆசிரமத்தில் உள்ள கோ சாலையில் 700 பசுக்களுக்கு, சாதுக்கள், துறவிகள் ஆகியோர் பூஜை செய்தனர். உலகத்தில் நன்மைக்காகவும், வன்முறை, தீவிரவாதம், ஜாதி சண்டைகள், விபத்துகள், மழை, வெள்ளம், வறட்சி, பூகம்பம் போன்ற பேரிடர்கள் ஏற்படக் கூடாது என்பதற்காகவும் கோ பூஜை நடத்தப்பட்டது. சாதுக்களைத் தொடர்ந்து, துறவிகளும், பொதுமக்களும் ஒவ்வொரு பசுவுக்கும் பூஜை செய்து வணங்கி வழிபட்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு சென்னை ராமகிருஷ்ண மடத்தின் மேலாளர் சுவாமி விமூர்த்தானந்தர் தலைமை வகித்தார்.

இதில் பாண்டுரங்க ஆசிரமத்தின் விட்டல் தாஸ் மகராஜ், பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிக ளார், துறவியர் மாநாடு ஒருங்கிணைப் பாளர் ராமானந்தா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x