இலவச பஸ் பாஸ் திட்டத்துக்கு முதியோர் பெரும் வரவேற்பு: டோக்கனை நாள் முழுவதும் பயன்படுத்த அனுமதி தேவை

இலவச பஸ் பாஸ் திட்டத்துக்கு முதியோர் பெரும் வரவேற்பு: டோக்கனை நாள் முழுவதும் பயன்படுத்த அனுமதி தேவை
Updated on
1 min read

முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்த மூத்த குடிமக்களுக்கான இலவச பஸ் பாஸ் திட்டம் நேற்று முதல் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் அமலானது. இத்திட்டதுக்கு முதியோர் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

இத்திட்டத்தின்படி 60 வய துக்கு மேற்பட்ட மூத்த குடிமக் கள் கட்டணமில்லாமல் பயணம் செய்ய www.mtcbus.org இணைய தளத்தில் விண்ணப்பத்தை பதி விறக்கம் செய்துகொள்ளலாம். இதுதவிர, மாநகர போக்குவரத்துக் கழக பஸ் நிலையங்கள் மற்றும் பணிமனைகள் என 42 இடங் களில் விண்ணப்பங்கள் வழங்கப் பட்டு வருகின்றன. இத்திட்டம் முதியோர் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.

முதியோர் அமைப்பு செய லாளர் வி.ராமாராவ் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘முதல்வர் அறி வித்துள்ள முதியோருக்கான இலவச பஸ் பாஸ் திட்டத்தை நாங்கள் வரவேற்று, நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். ஒரு மாதத்துக்கு 10 டோக்கன் வழங்கப்படுகிறது.

கோரிக்கை

ஒரு டோக்கனை ஒரு பஸ்ஸில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும் என விதி வகுக்கப் பட்டுள்ளது. தற்போதுள்ள நிலை யில், ஒரே பஸ்ஸில் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று வர முடியாது. பல்வேறு இடங்களுக்கு மாறி, மாறித்தான் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, ஒரு டோக்கனை ஒருநாள் முழுவதும் பயன் படுத்தும் வகையில் விதி முறையை மாற்ற வேண்டும். அப்போதுதான் முதியோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், பெண்களின் வயது வரம்பை 55 ஆக குறைந்து, பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

அதிகாரிகள் விளக்கம்

இது தொடர்பாக போக்கு வரத்துத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘மூத்த குடிமக்கள் விண்ணப்பித்தவுடன் உடனுக்குடன் டோக்கன் வழங்கி வருகிறோம். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே என 4 மாதங்களுக்கு 40 டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in