

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் ‘மாற் றத்தை நோக்கி மக்கள் சந்திப்பு’ என்ற பயணத்தை தொடங்கியுள் ளார். இதன் ஒரு பகுதியாக நேற்று ஈரோடு வந்த அவர், செய்தியாளர்களிடம் பேசியதாவது:
60 ஆண்டுகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இது தொடர்பாக சட்டமன்றத்தில் நான் பலமுறை வலியுறுத்தியுள்ளேன். விவசாய விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய்கள் கொண்டு சென்றால் கடும் பாதிப்புகள் ஏற்படும். எனவே இந்தத் திட்டத்தை கெயில் நிறுவனம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கூட்டணியில் இணைவது என்பது குறித்து மாநில, மாவட்ட நிர்வாகி களிடம் கருத்துக்கள் கேட்கப்பட் டுள்ளன. இதன் அடிப்படையில் ஒரு வாரகாலத்துக்குள் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். கட்சியில் அதிகம் பேர் போட்டியிட விரும்புவதால், அதிகளவில் சீட்டு அளிக்கும் கூட்டணியில் இடம்பெறுவோம். கூட்டணியில் குறைவான இடங்கள் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும். நடிகர் சங்க வளர்ச்சிக்காக புதிய நிர்வாகிகள் மேற்கொள்ளும் நடவடிக்கை களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பேன். இவ்வாறு சரத்குமார் கூறினார்.