

சாகித்ய அகாடமி விருது வென்றவர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலக இலக்கியங்களைத் தமிழுக்கும், தமிழ் இலக்கியங்களை உலங்கெங்கும் எடுத்துச் செல்லும் அறிவுப் பண்டமாற்று என்பது பெரும்பணி. அரும்பணி.
அத்தகைய அரும்பணியில், மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது, வங்கத்துக் கவிஞர் தாகூரின் புதினத்தைத் தமிழில் வடித்துள்ள முனைவர் கா.செல்லப்பன்; உலகப் பொதுமறையாம் திருக்குறளை இந்தியில் மொழிபெயர்த்துள்ள இராகவன்; கவிஞர் சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை புதினத்தை மராத்தியில் மொழிபெயர்த்துள்ள சோனாலி நவாங்குள் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
அனைத்து விருதாளர்களுக்கும் வாழ்த்துகள். பாராட்டுகள்" என்று பதிவிட்டுள்ளார்.