அரசுத் துறைகளில் தொடக்கநிலைப் பணியாளர் நியமனத் தடையை நீக்க வேண்டும்: ராமதாஸ்

ராமதாஸ்: கோப்புப்படம்
ராமதாஸ்: கோப்புப்படம்
Updated on
1 min read

அரசுத் துறைகளில் தொடக்கநிலைப் பணியாளர் நியமனத் தடையை நீக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (செப்.18) தன் ட்விட்டர் பக்கத்தில், "தமிழக அரசுத் துறைகளில் தொடக்கநிலைப் பணியாளர்களை நியமிக்க முடியவில்லை. புதிய பணியிடங்களை ஏற்படுத்தத் தடை விதிக்கப்பட்டிருப்பதும், 3 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்பக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதும்தான் இதற்குக் காரணம் ஆகும்.

கரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்காக, 20.05.2020இல் பிறப்பிக்கப்பட்டு, 24.10.2020இல் திருத்தம் செய்யப்பட்ட நிதித்துறை அரசாணை எண் 382இல்தான் இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவை இன்றைய சூழலுக்குப் பொருந்தாதவை!

கரோனா நிலைமை சீரடைந்து பொருளாதாரம் வளர்ச்சியடையத் தொடங்கியுள்ள நிலையில், கடந்த ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும். புதிய பணியிடங்களை உருவாக்கி, படித்துவிட்டுக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு அரசு வேலைகளை வழங்க வேண்டும்!" எனப் பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in