

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு அறநிலையத் துறை ஆணையர் சுற்றறிக்கைகள் மூலம் உத்தரவுகள், அறிவுரைகளை அனுப்புவது வழக்கம். துறை சார்ந்தசெயல்பாடுகளுக்காக அனுப்பப்படுவதால் சுற்றறிக்கைகள் மக்கள் பார்வைக்கு வெளியிடப்படாமல் இருந்தன.
இந்நிலையில், பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக அறநிலையத் துறையின் சார்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கைகள், உத்தரவுகள், ஆணைகள் hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இவற்றில் பெரும்பாலானவை திருப்பணி, நிர்வாகம் சார்ந்த சுற்றறிக்கைகள். இனிவரும் காலங்களில் ஆணையர் பிறப்பிக்கும் அனைத்து சுற்றறிக்கை, உத்தரவுகளும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.