குடிக்கச் சொல்லும் திராவிடக் கட்சிகள்: ஜெ.குரு

குடிக்கச் சொல்லும் திராவிடக் கட்சிகள்: ஜெ.குரு
Updated on
1 min read

‘வறுமையை ஒழிப்போம், எல்லோருக்கும் கல்வி அளிப்போம், சாதிமத பேதமற்ற சமதர்ம சமுதாயம் அமைப்போம், எல்லோருக்கும் உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க வீடு கிடைக்கச் செய்வோம், குடிசைகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம்’ என்றெல்லாம் கூறி திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்தன. ஆனால், நிறைவேற்றவில்லை.

மக்களை மதுவுக்கு அடிமையாக்கியதுதான் அவர்களது சாதனை. மக்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம். அவர்களோ குடிக்க வேண்டும் என்கிறார்கள். நாங்கள் ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம். இந்த துணிச்சல் திமுக, அதிமுகவுக்கு இருக்கிறதா? பெரி யார் வலியுறுத்திய சுயமரியாதை நமது மக்களிடம் இல்லை என அவர்கள் நினைக் கிறார்கள். அதனால்தான், தேர்தல் நேரத்தில் ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்று விடலாம் என்ற துணிச்சலில் அவர்கள் இருக்கிறார்கள்.

அன்புமணி முதல்வரானால் இலவச டிவி, மிக்சி, கிரைண்டர், ஆடு, மாடு போன்றவற்றை தரமாட்டோம். மாறாக, மக்களுக்கு இலவசமாக கல்வி வழங்கு வோம். இவ்வாறு குரு கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in