

புதுடெல்லியில் மத்திய அரசு தமக்கு ஒதுக்கியுள்ள வீட்டை திருவள்ளூர் தொகுதி மக்களின் பயன்பாட்டுக்காக காங்கிரஸ் எம்பி ஜெயக்குமார் அளித்துள்ளார்.
திருவள்ளூர் எம்பியாக இருப்பவர் காங்கிரஸ்கட்சியை சேர்ந்த ஜெயக்குமார். இவருக்காகபுது டெல்லியில் மத்திய அரசு ஒதுக்கியுள்ள வீட்டுக்கு, திருவள் ளூர் இல்லம் என்று பெயர் சூட்டி, திருவள்ளூர் தொகுதியிலிருந்து பணி, கல்வி நிமித்தமாகவோ, சுற்றுலாவுக்காகவோ புதுடெல்லி செல்பவர்கள், அதிக கட்டணம் செலுத்தி விடுதிகளில் தங்குவதை தவிர்க்க ஏதுவாக திருவள்ளூர் தொகுதி மக்களின் பயன்பாட்டுக்காக அளித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் எம்பி ஜெயக்குமார் தெரிவித்ததாவது:
நான் எம்பியானவுடன் மத்திய அரசு 2 வீடுகளை எனக்கு ஒதுக்கியுள்ளது. ஏற்கெனவே 10ஆண்டுகள் எம்எல்ஏவாக இருந்த தோடு, அப்போது சட்டப்பேரவையின் பல்வேறு குழுக்களுக்கு தலைவராக இருந்ததன் அடிப்படையில் 2 வீடுகளை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதில், ஒரு வீட்டை என் பயன்பாட்டுக்கு வைத்துக் கொண்டு, மற்றொரு வீட்டை, புதுடெல்லிக்கு வரும் திருவள்ளூர் தொகுதி மக்களுக்கான ஓய்வு இல்லமாக உருவாக்கியுள்ளேன். இந்த இல்லத்தில் திருவள்ளூர் தொகுதி மக்கள் இலவசமாக தங்குவதற்கான படுக்கை வசதிகள், உணவு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இல்லத்தை பராமரிக்க ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.