கடந்த ஆண்டு பெரியாருக்கு மரியாதை செலுத்திய காவலர்கள் பணியிட மாற்றம்: இந்த ஆண்டு காவலர்கள் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கும் கடலூர் மாவட்டக் காவல்துறையினர் .
சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கும் கடலூர் மாவட்டக் காவல்துறையினர் .
Updated on
1 min read

கடந்த ஆண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய 3 காவலர்கள் பணியி டமாற்றம் செய்யப்பட்டனர்.இந்த ஆண்டு பெரியார் பிறந்த தினத்தை சமூக நீதி நாளாக பெரியாருக்கு கடலூர் மாவட்ட காவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

தந்தை பெரியார் பிறந்த தினத்தை சமூகநீதி நாள் உறுதி யேற்பு நாளாகக் கொண்டாடப்படும் என முதல்வர் கடந்த சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் அறிவித்தார். அதைத்தொடர்ந்து நேற்றுதமிழகம் முழுவதும் அரசு அலு வலகங்களில் சமூகநீதி நாள் உறுதியேற்பு நடைபெற்றது.

அதன்படி கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவ லகத்தில் நேற்று கண்காணிப்பாளர் சக்திகணேசன் தலைமையில் காவலர்கள் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்றனர். அப்போது சுயமரியாதை ஆளுமைத் திறனும், பகுத்தறிவு கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும் என வாசகங்களோடு அனைத்துக் காவ லர்களும் உறுதிமொழி ஏற்றனர்.

ஆனால் கடந்த ஆண்டு இதே பெரியார் பிறந்த தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டக் காவல்துறையைச் சேர்ந்த காவலர்கள் 3 பேர் கருப்பு சட்டை அணிந்து, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதையடுத்து 3 காவலர்களும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அவர்கள் பணியிட மாற்றத்திற்கு நிர்வாக வசதிக் காக மாற்றப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் விழுப்புரம் மக்களவை உறுப்பினர் டி.ரவிக்குமார் கோரிக்கையின் பேரில் 3 காவலர்களும் மீண்டும் கடலூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு பெரியாருக்கு மரியாதை செய்தவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அதே காவல்துறை பெரியாருக்கு மரியாதை செலுத்தும் விதமாக சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in