

முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கை:
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தங்கமணி, மதுரை கோச் சடையைச் சேர்ந்த இளங்கோ, மேலூரைச் சேர்ந்த ராகுல், அம்பத் தூரைச் சேர்ந்த முத்துலட்சுமி, மயிலாடுதுறையைச் சேர்ந்த சிவகாமி, வேலூர் கழனிப்பாக்கத் தைச் சேர்ந்த தாட்சாயிணி, ஓ.எம்.சி தெருவைச் சேர்ந்த சந்தியா, சேலம் ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த கண்ணுப்பையன் ஆகியோர் மின்சாரம் தாக்கியதில் இறந்தனர்.
மேலும், காஞ்சிபுரம் தெள்ளிமேட் டைச் சேர்ந்த செல்லன், தருமபுரி பொம்மஹள்ளியைச் சேர்ந்த சத்யா, காளம்மாள், நெல்லை சீவலப்பேரியைச் சேர்ந்த ஐயப் பன், திண்டுக்கல் பச்சைமலை யான்கோட்டையைச் சேர்ந்த முரு கேஸ்வரி, சிவகங்கை மாவட்டம் ஆதனூரைச் சேர்ந்த ஆனந்தகுமார், வெள்ளக்கரையைச் சேர்ந்த கார்த்திகேயன், கீழப்பூங்குடியைச் சேர்ந்த ராகுல் காந்தி ஆகியோரும் மின்சாரம் தாக்கி இறந்தனர்.
மின்சாரம் தாக்கி இறந்த 16 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.3 லட்சம் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.