

சென்னை வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் பார்வை யாளர்களுக்கு உண்ணுமிடம் மற்றும் பொருட்கள் வைப்பதற் கான அறை அமைக்கப்பட் டுள்ளது.
இது தொடர்பாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு ஆண்டுதோறும் 25 லட்சம் பார்வையாளர்கள் வருகை தருகிறார்கள். பார்வை யாளர்கள் பயன்பாட்டிற்காக குடிநீர், கழிப்பிடம், சாலை, ஓய் விடங்கள், வாகன வசதி போன்றவை சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளன. பூங்கா வில் தூய்மையையும், சுகா தாரத்தையும் பேணும் பொருட்டு பார்வையாளர்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக், காகிதப் பொருட் கள் போன்றவற்றை அனுமதிப் பதில்லை. மேலும் பூங்காவில் விலங்குகளுக்கு பார்வையாளர் கள் உணவு அளிப்பதை தவிர்க்கும் பொருட்டு, பார்வை யாளர்கள் கொண்டு வரும் உணவுப் பொருட்கள், நொறுக் குத் தீனி, சாக்லேட், குளிர்பானங் கள் போன்ற பொருட்களையும் பூங்காவினுள் அனுமதிப்ப தில்லை.
எனவே பார்வையாளர்கள் கொண்டு வரும் உணவுப் பொருட் களை பாதுகாத்து வைப்பதற்கும், கொண்டு வரும் உணவுப் பொருட்களை உண்பதற்கும் புதியதாக பொருட்கள் வைப்பறை மற்றும் உணவு உண்ணுமிடம் அமைக்கப்பட்டுள்ளன. பொருட் கள் வைப்பறையில் சுமார் 2500 பைகளை வைக்க வசதியாக இரும்பு அலமாரிகள் அமைக்கப் பட்டுள்ளன. இங்கு பொருட்களை வைக்க கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. உணவு உண்ணு மிடத்தில் பார்வையாளர்கள் வசதியாக அமர்ந்து சாப்பிடு வதற்கு 360 இருக்கைகள் கொண்ட அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் ஓய்வாக மரத்தடியில் அமர்ந்து சாப்பிடு வதற்கும் 100 கோரைப்பாய்கள் வைக்கப்பட்டுள்ளன. குடிநீர் வசதி மற்றும் குப்பை தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன. உணவு உண்ணுமிடங்களில் சேரும் குப்பைகளை 10 நிமிடத்திற்கு ஒரு முறை சேகரித்து நீக்க 3 தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்தப் புதிய வசதிகளை கடந்த மே மாதம் 3,83,367 பார் வையாளர்கள் பயன்படுத்தியுள் ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி நடவடிக்கையினால் பூங்காவை தூய்மையாக பராமரிக்க முடிகிறது. மேலும் விலங்குகளின் இயற்கையான உணவு முறைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.