

கரூர் மாவட்டத்தில்கரூர், புகழூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர் வட்டாட்சியர்கள் உள்ளிட்டவட்டாட்சியர் நிலையில் உள்ள 16 பேர் பணியிடமாற்றம் செய்துமாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் இன்று (செப். 17ம்தேதி) உத்தரவிட்டுள்ளார்.
கரூர் வட்டாட்சியராககரூர் நகரநிலவரி திட்டதனி வட்டாட்சியர்ஆர்.மோகன்ராஜ், அங்கிருந்த ப.சக்திவேல். கரூர் தமிழ்நாடுமாநில வாணிபக்கழக (சில்லரை விற்பனை) உதவி மேலாளராகவும், அங்கிருந்த ஆர்.விஜயா, குளித்தலை வட்டாட்சியராகவும், அங்கிருந்த டி.கலியமூர்த்தி குளித்தலை சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியராகவும், அங்கிருந்த எம்.வேலுசாமி, தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மேற்பார்வை அலுவலராகவும் (கலால்), அங்கிருந்த எஸ்.வெங்கடேசன் கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியராகவும்.
அங்கிருந்த க.மகுடீஸ்வரன், குளித்தலைகாவிரி (கட்டளை) தெற்கு வெள்ளாறுஇணைப்பு கால்வாய்திட்டம் அலகு 2 தனி வட்டாட்சியராக (நிலம் எடுப்பு), அங்கிருந்த எம்.ராஜசேகரன் மாவட்ட ஆட்சியர்அலுவலக பேரிடர்மேலாண்மை தனிவட்டாட்சியராகவும் அங்கிருந்த கு.அருள் கரூர்மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்மற்றும் சிறுபான்மையினர்நல அலுவலகதனி வட்டாட்சியராகவும்.
அங்கிருந்த எஸ்.மதிவாணன் புகழூர்வட்டாட்சியராகவும், அங்கிருந்த பெ.செந்தில்குமார், கரூர்சமூக பாதுகாப்புத்திட்ட தனிவட்டாட்சியராகவும், அங்கிருந்த ஏ.ஈஸ்வரன் கரூர்காவிரி (கட்டளை) தெற்கு வெள்ளாறுஇணைப்பு கால்வாய்திட்டம் தனிமாவட்ட வருவாய்அலுவலர் அலுவலகவட்டாட்சியராக, அங்கிருந்த எம்.ராஜாமணி கடவூர்வட்டாட்சியராகவும், அங்கிருந்த ஆர்.வித்யாவதி கரூர்நகர நிலவரிதிட்ட தனிவட்டாட்சியராகவும்.
கரூர் வட்டசாலை அலகு 1 தனி வட்டாட்சியராக (நிலம் எடுப்பு) பொ.பழனி, அங்கிருந்த ஆர்.செந்தில், கிருஷ்ணராயபுரம் காவிரி (கட்டளை) தெற்குவெள்ளாறு இணைப்புகால்வாய் திட்டம்அலகு 1 தனிவட்டாட்சியராக (நிலம் எடுப்பு) பணியிட மாற்றம்செய்யப்பட்டுள்ளனர்.