

துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில், 1.34 கிலோ தங்கக் கட்டிகளை கடத்திய கேரளஇளம்பெண் கைது செய்யப்பட்டார்.
துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் சென்னை விமான நிலையத்துக்கு நேற்று அதிகாலை வந்தது. அதில் ஒரு பெண், தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் தகவல் கொடுத்ததை அடுத்து, அந்த விமானத்தில் வந்த பெண் பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர்.
அப்போது, கேரளாவை சேர்ந்த 28 வயது பெண் பயணிஒருவர் தன்னிடம் சுங்கத் தீர்வைசெலுத்தும் பொருட்கள் எதுவும்இல்லை என்று கூறி, அதற்கானபிரத்யேக வாசல் வழியாக வெளியே சென்றார். சந்தேகத்தின்பேரில் சுங்கத் துறை பெண் அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
பின்னர் அவரை தனி அறைக்குஅழைத்துச் சென்று, சோதனையிட்டனர். அப்போது, உள்ளாடையில்அவர் 2 தங்கக் கட்டிகளைமறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். 1.34 கிலோ எடை கொண்ட தங்கக்கட்டிகளின் சர்வதேச மதிப்பு ரூ.65லட்சம். இதையடுத்து, அந்தபெண்ணை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.