Published : 17 Sep 2021 03:11 AM
Last Updated : 17 Sep 2021 03:11 AM

காங்கிரஸ் சார்பில் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் பணிகளுக்காக 52 பேர் நியமனம்: தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை

ஊரக உள்ளாட்சித் தேர்தல் பணிகளை மேற்கொள்ள காங்கிரஸ் சார்பில் 9 மாவட்டங்களுக்கும் 52 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அக்டோபர் 6, 9 தேதிகளில் நடக்கவுள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ளதேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் அளவூர் வி.நாகராஜன், எஸ்.டி. ராமச்சந்திரன் எம்எல்ஏ, முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் நாஞ்சில் வி.ஈஸ்வரபிரசாத் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் கே.ஜெயக்குமார், செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.சுந்தரமூர்த்தி, ஆர்.எம்.கருமாணிக்கம் எம்எல்ஏ, செங்கல்பட்டு வடக்கு மாவட்டத் தலைவர் ஆர்.எஸ்.செந்தில்குமார் ஆகியோரும், ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு ஏ.எம்.முனிரத்தினம் எம்எல்ஏ, ராணிப்பேட்டை மாவட்டத் தலைவர் சி.பஞ்சாட்சரம், துரை சந்திரசேகர் எம்எல்ஏ, மாநில துணைத் தலைவர் வாலாஜா ஜெ.அசேன், மாநிலப் பொதுச்செயலாளர் பி.ராஜ்குமார் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்துக்கு மாவட்டத் தலைவர் எஸ்.பிரபு. எம்எல்ஏக்கள் எஸ்.விஜயதரணி, எஸ்.மாங்குடி, சிறுபான்மையினர் அணி மாநிலத் தலைவர் ஜெ.அஸ்லம் பாட்சா, ஜெ.விஜய் இளஞ்செழியன், முன்னாள் மாவட்டத் தலைவர் பாலவரதன் ஆகியோரும் வேலூர் மாவட்டத்துக்கு வேலூர் மத்திய மாவட்டத் தலைவர் ஜி.சுரேஷ்குமார், எம்எல்ஏக்கள் ஜே.ஜி.பிரின்ஸ், அசன் மவுலானா, வேலூர் மாநகர மாவட்டத் தலைவர் பி.டீக்காராமன், முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் தெய்வேந்திரன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் எம்.கே.விஷ்ணுபிரசாத், விழுப்புரம் வடக்கு மாவட்டத் தலைவர் ஆர்.பி.ரமேஷ், அசோகன் எம்எல்ஏ, மாநில துணைத் தலைவர்கள் டி.என்.முருகானந்தம், ஆர்.ரங்கபூபதி, விழுப்புரம் மத்திய மாவட்டத் தலைவர் வி.சீனிவாசகுமார், எம்எல்ஏக்கள் எஸ்.ராஜகுமார், ஊர்வசி அமிர்தராஜ், மாநில துணைத் தலைவர் முகமது குலாம் மொய்தீன், முன்னாள் மாவட்டத் தலைவர் சிறுவை ராமமூர்த்தி, கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு மாவட்டத் தலைவர் பி.எஸ். ஜெய்கணேஷ், எம்எல்ஏக்கள் திருமகன் ஈவெரா, ஆர். ராதாகிருஷ்ணன், மாநில துணைத் தலைவர் மணிரத்தினம், முன்னாள் மாவட்டத் தலைவர் தனபால், முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் சீனிவாசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தென்காசி மாவட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், தென்காசி மாவட்டத் தலைவர் எஸ்.பழனி நாடார், எஸ்.ராஜேஷ்குமார் எம்எல்ஏ, முன்னாள் எம்.பி. ராமசுப்பு, மாநிலப் பொதுச்செயலாளர் எம்.எஸ்.காமராஜ், திருநெல்வேலி மாவட்டத்துக்கு முன்னாள் மத்திய இணை அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், மாநில பொருளாளர் ரூபி மனோகரன், நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் தனசிங், நெல்லை மாநகர் மாவட்டத் தலைவர் கே.சங்கரபாண்டியன், ஆர்.கணேஷ் எம்எல்ஏ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x