

கொங்குநாடு முன்னேற்றக் கழகம் சார்பில் கோவை கொடி சியா மைதானத்தில் பிப்.28-ம் தேதி மக்கள் எழுச்சி மாநாடு நடை பெற உள்ளது. இம் மாநாட்டுக்காக நேற்று நடைபெற்ற பூமி பூஜையில் கட்சித் தலைவர் பெஸ்ட் ராமசாமி கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, ‘கொங்குநாடு முன்னேற்றக் கழகம் சார்பில் நடைபெறும் மாநாட்டில், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த 9 மாவட்ட மக்கள் பங்கேற்கிறார்கள். இந்த மாநாட்டில் கொங்கு மண்டல மக்க ளின் பிரச்சினைகளை விவாதிக்க உள்ளோம்.
அவிநாசி - அத்திக்கடவு திட்டம், மதுவிலக்கு, கள் இறக்க அனுமதி உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல் படுத்த வேண்டும். கோவை யில் கட்டப்பட்டு வரும் இரண் டடுக்கு மேம்பாலத்துக்கு தீரன் சின்னமலை பெயர் சூட்ட வேண்டும் ஆகிய கோரிக்கை களையும் இந்த மாநாட்டின் மூலம் வலியுறுத்துவோம்.
சட்டப்பேரவைத் தேர்தலைப் பொறுத்தவரையில், கூட்டணி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. நிர்வாகிகளிடம் ஆலோசித்து எங்களது கோரிக் கைகளை நிறைவேற்ற உறுதிய ளிக்கும் கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திப்போம்’ என்றார்.