குன்றத்தூர் ஒன்றியத்தில் சாலையின் தரத்தை பரிசோதித்த ஆட்சியர்
குன்றத்தூர் ஒன்றியத்தில் ரூ.1 கோடியே 27 லட்சம் செலவில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணியையும் சாலையின் தரத்தையும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி பரிசோதித்தார்.
செரப்பனஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் ரூ.115 கோடி செலவில், 2 ஆயிரத்து 48 குடி யிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டு வீடுகளை இழந்தோர் மற்றும் நீர்நிலைகளின் அருகில் ஆக்கிரமித்து வீடு கட்டியவர்கள் ஆகியோர், குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மறுகுடிய மர்த்தப்பட உள்ளனர். அதற் காக அப்பகுதியில் குடிநீர், மின் சாரம் போன்ற அடிப்படை வசதி கள் மற்றும் ரேஷன் கடை, குழந் தைகள் மையம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும் போக்குவரத்து வசதி ஏற்படுத்தும் வகையில் செரப்பனஞ் சேரி அடுத்த வட்டம்பாக்கம்- பணப்பாக்கம் இடையே ரூ.1 கோடியே 27 லட்சம் செலவில் சாலை அமைக்கும் பணியும் தற் போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் செரப்பனஞ்சேரி யில் நடைபெற்று வரும் அடிப் படை வசதிகளுக்கான பணிகள் மற்றும் சாலை அமைக்கும் பணிகளை, ஆட்சியர் கஜலட்சுமி நேற்று முன்தினம் நேரில் ஆய்வு செய்தார். அப்போது சாலையின் தரத்தை பரிசோதிக்கவும் அதிகாரி களுக்கு உத்தரவிட்டு, அதை பார்வையிட்டார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் திட்ட இயக்குநர் முத்துமீனாள் அப்போது உடனிருந்தார்.
