உள்ளாட்சித் தேர்தல்; மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டி: கமல் அறிவிப்பு

கமல்: கோப்புப்படம்
கமல்: கோப்புப்படம்
Updated on
1 min read

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடுவதாக, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

புதிதாகப் பிரிக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வேண்டும். இம்மாவட்டங்களுக்கு செப்.15-க்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், 9 மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாக அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என, மாநில தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.

வேட்புமனுத் தாக்கல் நாளை மறுநாள் (செப்.15) தொடங்கி செப்.22-ம் தேதி வரை நடைபெறும். 23-ம் தேதியன்று வேட்பு மனுக்கள் ஆய்வு செய்யப்படும். 25-ம் தேதி அன்று வேட்பு மனுவைத் திரும்பப் பெறலாம். வேட்பு மனுக்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பெறப்படும்.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடுவதாக, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, கமல் இன்று (செப். 16) தன் ட்விட்டர் பக்கத்தில், "உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடுகிறது. 9 மாவட்டங்களிலும் பரப்புரைப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். களத்தில் சந்திப்போம். வெற்றி நமதே" என பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in