

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘தமிழகத்தில் 16, 17-ம் தேதிகளில் தென்மாவட்டங்கள், ஓரிரு உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக் கூடும்.
18, 19-ம் தேதிகளில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி,மின்னலுடன் கன மழையும், ஒருசிலஇடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் நீலகிரி,கோவை மாவட்டங்களில் ஒருசிலஇடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக் கூடும்’’ என்று கூறப்பட்டுள்ளது.