பெண் குழந்தைகளுக்கான ‘செல்வ மகள் சேமிப்பு திட்டம்’: பெற்றோருக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்

பெண் குழந்தைகளுக்கான ‘செல்வ மகள் சேமிப்பு திட்டம்’: பெற்றோருக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்
Updated on
1 min read

பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறும்படி பொதுமக்களை தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக, தமிழக அரசு பல்வேறுசமுக பாதுகாப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் இந்திய அஞ்சல் துறையின் சார்பில், ‘ செல்வமகள் சேமிப்பு திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. அதிகபட்சம் 2 பெண் குழந்தைகள் என்ற அடிப்படையில் 10 வயதுக்குஉட்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

இதில் கணக்கைத் தொடங்க குறைந்தபட்சம் ரூ.250 செலுத்த வேண்டும். மேலும் ஆண்டுக்கு குறைந்தபட்சமாக ரூ.250, அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை வைப்பு தொகை செலுத்தலாம். சேமிக்கும் தொகைக்கு ஆண்டுக்கு 7.6 சதவீதம் வட்டி பெறலாம்.இத்திட்டத்தின் முதிர்வுத் தொகையில் 50% வைப்புத் தொகையை பெண் குழந்தையின் மேற்படிப்புக்காக பெற்றுக் கொள்ளலாம். முதிர்வுத் தொகையை பெண் குழந்தையின் திருமணத்தின்போதோ அல்லது 21 வயது நிறைவடையும்போதோ பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தின் முதிர்வு தொகைக்கு வரிவிலக்கு உண்டு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் சேர விரும்பும்பெற்றோர்களின் வசதிக்காக, சென்னை பொது அஞ்சலகத்தில் சிறப்புக் கவுன்ட்டர் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில் கணக்கைத் தொடங்க குறைந்தபட்சம் ரூ.250 செலுத்த வேண்டும். மேலும்ஆண்டுக்கு குறைந்தபட்சமாக ரூ.250, அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை வைப்பு தொகை செலுத்தலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in