

சிறு வணிகர் கடன் என்ற பெயரில், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க அதிமுகவினர் முயற்சி செய்கின்றனர். தகுதி உள்ள வணி கர்களுக்கு மட்டுமே கடன் வழங்கப் படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கட்சியின் மாநில செய லாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளி யிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
தமிழகத்தில் சிறு வணிகர் களுக்கு வட்டியில்லா கடனாக ரூ.5 ஆயிரம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதை வாரம் ரூ.200 வீதம் திருப்பிச் செலுத்து மாறும் கூறப்பட்டது. தொடக்கத் தில் வெள்ளம் பாதித்த பகுதிக ளுக்கு மட்டும் என அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் பின்னர் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.
இந்நிலையில் சிறு வணிகர் அல்லாதவர்களுக்கும் இந்த கடனை வழங்க நிர்ப்பந்தித்து வருகின்றனர். சிறு வணிகர் கடன் என்ற பெயரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க அதிமுக வினர் முயற்சித்து வருகின்ற னர். இதனால், தகுதி இல்லாத வர்களுக்கும் கடன் வழங்க வங்கி ஊழியர்கள், அதிகாரிகளை நிர்ப்பந்திக்கின்றனர். தகுதி உள்ள சிறு வணிகர்களுக்கு மட்டும் கடன் வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழகம் முழுவதும் ஆசிரி யர்கள் போராட்டம் நடத்தி வருகின் றனர். இதுதொடர்பாக ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அரசு ஊழியர்கள், வருவாய் துறை ஊழியர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக் குறிச்சி அருகே தனியார் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா கல்லூரியில் 3 மாணவிகள் மர்ம மான முறையில் உயிரிழந்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு ஜி.ராம கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.