Published : 16 Sep 2021 03:11 AM
Last Updated : 16 Sep 2021 03:11 AM

சிறப்பாக பணியாற்றிய 3 செவிலியர்களுக்கு ‘ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்’ விருது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்

சென்னை

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிறப்பாகப் பணியாற்றும் செவிலியர்களை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதை மத்திய சுகாதாரத் துறை வழங்கி வருகிறது.

அதன்படி, 2020-ம் ஆண்டுக் கான விருது தமிழகத்தில் 3 பேர்உட்பட 51 செவிலியர்களுக்கு அறிவிக்கப்பட்டது. சென்னை கே.கே.நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் ஒ.வி.உஷா, 1,000-க்கும்மேற்பட்ட பிரசவங்கள் பார்த்துள் ளார். மேலும், சுகாதார திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

இதேபோல, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை செவிலியர் ஜி.மணிமேகலை, விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் எஸ்.வேளாங்கன்னி ஆகியோரும் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

கரோனா தொற்று காலம் என்பதால், விருது வழங்கும் விழாவில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற விழாவில்,செவிலியர்கள் ஒ.வி.உஷா, மணிமேகலை, வேளாங்கன்னி உள்ளிட்ட 51 பேருக்கு ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். இந்த விழாவில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பங்கேற்றார்.

இதுகுறித்து செவிலியர் ஒ.வி.உஷா கூறும்போது, “நான் 32 ஆண்டுகளாக செவிலியராகப் பணியாற்றி வருகிறேன். ஆரம்பத்தில் எந்த வசதியும் இல்லாத, காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் கிராமத்தில் உள்ள ஆரம்பசுகாதார நிலையத்தில் பணியாற்றினேன். இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரசவங்களைப் பார்த்திருக்கிறேன். இதுவரை ஒருஇறப்புகூட இல்லை. ஃப்ளாரன்ஸ்நைட்டிங்கேல் அம்மையார் பிறந்த200-வது ஆண்டில் இவ்விருதைபெறுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனது வாழ்நாள் சாதனையாகும். 2019-ல் தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலின் சிறந்த செவிலியர் விருதைப் பெற்றிருக்கிறேன்” என்றார்.

கை விளக்கேந்திய காரிகை

`கை விளக்கேந்திய காரிகை’ என்று முழுவதும் போற்றப்படும் ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார், செவிலியர் சேவையின் முன்னோடி. இவர் பிறந்த நாளான மே 12-ம் தேதி சர்வதேசசெவிலியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இவரது 200-வதுபிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் 2020-ம் ஆண்டைஉலக செவிலியர் ஆண்டாக,உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x