

கோடநாடு வழக்கில் ஆங்கிலப் படங்களை விஞ்சும் மர்மங்கள் நிரம்பியுள்ளதாக சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் அவர் நேற்று கூறியதாவது:
கோடநாடு என்றாலே ஆங்கில படங்களை விஞ்சும் மர்மங்கள் உள்ளன. அங்கு சொத்து வாங்கியது, பின்னர் பங்குதாரரை பிரித்தது வரை, ஜெயலலிதா மரணம் முதல் கொலை, கொள்ளை வரை அனைத்தும் மர்மமாகவே உள்ளது. அந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. இதில் உள்ள மர்மங்கள் விரைவில் வெளிவர வேண்டும். கோடநாடு வழக்கை அதிமுக ஏன் எதிர்க்கிறது எனப் புரியவில்லை.
உள்ளாட்சித் தேர்தலிலும் காங்கிரஸ் திமுக கூட்டணி தொடரும். இத்தேர்தலிலும் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.