

நீலகிரி மாவட்டம் உதகை மார்க்கெட் வளாகத்தில் உள்ள மீன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, விற்பனைக்காக வைக்கப் பட்டிருந்த 400 கிலோகெட்டுப்போன மீன்களை அழித்தனர்.
நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி மார்க்கெட், மெயின் பஜார் சாலை, சேரிங்கிராஸ் உட்படபல இடங்களில் மீன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. மீன்கள்கெட்டுப்போகாமல் இருக்க பார்மலின் எனப்படும் ரசாயனம்கலந்து, மீன்கள் பதப்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது.
மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யாவின் உத்தரவின்பேரில் மீன்வளத் துறை அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவினர், மீன்வளத் துறை உதவி இயக்குநர் கணேசநேரு தலைமையில், உதகை நகராட்சி மார்க்கெட், மெயின் பஜார்உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட மீன் கடைகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் 10 கடைகளில் கெட்டுப் போன மீன்கள் சுமார் 400 கிலோ விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது, தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்து, பினாயில் ஊற்றி அழித்தனர். தரமற்ற மீன்களை விற்பனைக்கு வைத்திருந்த 10 கடை உரிமையாளர்களுக்கு விளக்கம்கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்த 3 கடை உரிமையாளர் களுக்கு தலா ரூ.2,000 வீதம் ரூ.6,000அபராதமும், உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் இல்லாமல் மீன்விற்பனை செய்து வந்த 8 கடைகளுக்கு தலா ரூ.5,000 வீதம் ரூ.40,000 அபராதம் வசூலிக்கப்பட்டது.
தரமான மீன்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும், கடைகளை தூய்மையாக பராமரிக்கவேண்டும் என மீன் விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.