

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது ஆதரவாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் எம்பி கே.எஸ்.அழகிரி, தென்சென்னை மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜன், முன்னாள் எம்எல்ஏக்கள் சுந்தரம், ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ‘காங்கிரஸில் இனி கோஷ்டிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கும் கோட்டா முறை கிடையாது. விருப்ப மனு அளிக்காதவர்கள் எவ்வளவு பெரிய தலைவர்களாக இருந்தாலும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது’ என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தனது ஆதரவாளர்களுடன் ப.சிதம்பரம் ஆலோசனை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.