

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட்டால் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக - தேமுதிக - பாஜக கூட்டணி ஏற் படும் என்று பாஜக மூத்த தலை வர் சுப்பிரமணியன் சுவாமி தெரி வித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதால் கூட்டணி அமைக்க நேரடியாகவும், மறைமுகமாவும் பல்வேறு கட்சிகள் பேச்சு நடத்தி வருகின்றன. இந்நிலையில் சுப்பிர மணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மு.க.ஸ்டாலினை முதல் வர் வேட்பாளராகவும், திமுக தலை வராகவும் கருணாநிதி அறிவித்தால் பாஜக, திமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் கொண்ட புதிய அணி உரு வாகும்’ என கருத்து தெரிவித்தி ருந்தார்.
இது தொடர்பாக ‘தி இந்து’விடம் சுப்பிரமணின் சுவாமி கூறியதாவது:
திமுக தலைவர் கருணாநிதி இந்துக்களுக்கு எதிரானவர். ஆனால், அவரது மகனும் திமுக பொருளாளருமான ஸ்டாலின், மனைவியுடன் வெளிப்படை யாகவே கோயிலுக்குச் செல்பவர். அனைத்து மதத்தினரையும் சம மாக மதிப்பவர். திமுகவில் இருப் பவர்களில் 90 சதவீதம் பேர் இந்துக் கள் என துணிச்சலாக கருத்து தெரிவித்துள்ளார். கருணாநிதிக்கு அடுத்து திமுகவினர் ஸ்டாலின்மீது தான் நம்பிக்கை வைத்துள்ள னர்.
எனவே, இனியும் தாமதிக்காமல் ஸ்டாலினை கட்சித் தலைவராகவும், முதல்வர் வேட்பாளராகவும் கரு ணாநிதி அறிவிக்க வேண்டும். தேமுதிக தலைவர் விஜயகாந்தும் கடவுள் நம்பிக்கை கொண்டவர். அனைத்து சமுதாயத்தினரையும் மதிப்பவர்.
எனவே, திமுக தலைவராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டால் திமுக - தேமுதிக - பாஜக கூட்டணி ஏற்படும். இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு பாஜக தலைவர் அமித்ஷாவிடம் பேசினேன். தமிழ கத்தில் அதிமுகவை தோற்கடிக்க வேண்டும். அதற்கு திமுக - தேமுதிக - பாஜக கூட்டணி அமைய வேண்டும். இதற்காக தனிப்பட்ட முறையில் முயற்சி செய்வேன். அதிமுக - பாஜக கூட்டணி ஏற்படும் என்ற தகவல் கற்பனையானது. அதற்கு வாய்ப்பே இல்லை என்றார்.
தேமுதிகவை தங்கள் கூட்ட ணிக்கு கொண்டுவர திமுகவும், பாஜகவும் தீவிரமாக முயற்சித்து வரும் நிலையில் சுப்பிரமணியன் சுவாமி திமுக - தேமுதிக - பாஜக கூட்டணி ஏற்படும் எனக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.