

கும்பகோணம் மகாமக திருவிழா வையொட்டி 11 இருசக்கர 108 ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட் டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரி வித்தார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 8-ம் தேதி தலைமைச் செய லகத்தில் 108 அவசரகால முதலு தவிக்கான 41 இருசக்கர வாகனங் களின் சேவையை தொடங்கி வைத் தார். போக்குவரத்து அதிகமுள்ள பகுதிகள், அதிக மக்கள் நடமாடும் பகுதிகள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் கள் செல்ல முடியாத பகுதிகளில் விபத்தில் பாதிக்கப்பட்டவர் களுக்கு உடனடியாக இருசக்கர 108 ஆம்புலன்ஸ் சென்று முதலுதவி அளிக்கும்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணத்தில் நடைபெறும் மகா மகம் திருவிழாவினையொட்டி சுமார் 40 லட்சம் மக்கள் கூடு வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் எந்த விதமான அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்கும் வகை யில் நடவடிக்கை எடுக்க முதல் வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மகாமக திருவிழாவில் மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள இடங் களில் 11 இருசக்கர 108 ஆம்பு லன்ஸ் பயன்படுத்தப்படுகிறது.
இந்த இருசக்கர வாகனத்தில் கையில் எடுத்துச் செல்லக்கூடிய ஆக்சிஜன் சிலிண்டர், நாடித் துடிப்பை கண்டறியும் கருவி, ரத்த அழுத்தத்தை கண்டறியும் கருவி, ரத்தத்தில் சர்க்கரை அளவை அறியும் கருவி, உடல் சூட்டை அறியும் கருவி போன்ற உயிர் காக்கும் கருவிகளும், தேவையான அளவு மருந்துகளும் வைக்கப்பட்டுள்ளன.
இதனால் பாதிக்கப்பட் டோருக்கு உடனடியாக முதலு தவி அளிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத் துவமனைக்கு எடுத்துச் செல்லப் பட்டு உயிர் காக்கப்படும்.
மகாமகம் குளத்தைச் சுற்றி 5 இரு சக்கர வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும், மகாமகத்திற்காக 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 18 பிரத்யேகமாக களமிறக்கப்பட்டுள்ளன. பொது மக்கள் அவசர உதவிக்கு 108-ஐ அழைத்து பயன்படுத்திக் கொள்ளவும். இவ்வாறு அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள் ளார்.