

பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் விநியோக மேலாண்மை, விநியோக அமைப்பு ஆகியவை வேகமாக நகரும் நுகர்பொருட்கள் துறையில் வலிமையான இடத்தை பெற்றுள்ளன என்று அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆச்சார்யா பால்கிருஷ்ணா கூறினார்.
இதுகுறித்து பதஞ்சலி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம்விநியோக மேலாண்மை விஷயத்தில் மற்ற நிறுவனங்களுக்கு முன்னுதாரணமாக கடந்த 2ஆண்டுகளாக நவீன தொழில்நுட்பங்களை புகுத்தி வருகிறது.
பரூவா சொல்யூஷன்ஸ் என்றநிறுவனம் பதஞ்சலி நிறுவனத்துக்கு விநியோக மேலாண்மை மென்பொருள் அமைப்பை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி அமலாக்கம் ஆகியவற்றால் பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், பதஞ்சலி நிறுவனம் தனது வணிக முன்னுரிமைகளில் கவனம் செலுத்தியது.
முக்கியமான தரவுகளை வெளிநாட்டு சர்வர்களில் வைத்திருப்பது தேசிய பாதுகாப்புக்கும். பொருளாதாரத்துக்கும் ஏற்றதல்ல என்பதால் சுதேசிய முறையில் புதியமென்பொருள் செயல்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு பதஞ்சலி தயாரிப்புகள் எளிதாக கிடைப்பதற்காக விநியோக மேலாண்மையை திறமையாக கையாளும் வகையில் இதன்மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
‘க்ளவுட்’ அடிப்படையில் செயல்படும் இந்த மென்பொருள் தயாரிப்புக்காக பரூவா சொல்யூஷன்ஸ் நிறுவனத்தில் அதிக முதலீடு செய்யப்பட்டுள்ளது.
பதஞ்சலி நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆச்சார்யா பால்கிருஷ்ணா, “ஒவ்வொரு துறையிலும் புதியதொழில்நுட்பங்கள் தேவைப்படுகின்றன. ஆனால், அது நுகர்வோருக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். நுகர்வோரின் நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே நமது நோக்கம்” என்று தெரிவித்துள்ளார்.