Published : 15 Sep 2021 03:11 AM
Last Updated : 15 Sep 2021 03:11 AM

காஞ்சி, செங்கை மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்- 7 ஒன்றியங்களுக்கு அக். 6-ல் வாக்குப்பதிவு

காஞ்சிபுரம்/செங்கல்பட்டு/ திருவள்ளூர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு அக்.6-ம் தேதியும், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஒன்றியங்களுக்கு அக்.9-ம் தேதியும் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்தல் மூலம் மாவட்ட கவுன்சிலர்கள் 11 பேரும், ஒன்றிய கவுன்சிலர்கள் 98 பேரும், ஊராட்சி தலைவர்கள் 274 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 1,938 பேரும் என மொத்தம் 2,321 உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள11 மாவட்டக் கவுன்சிலர்களில் இருபதவிகள் பட்டிலினத்தவர்களுக்கும், 2 பதவிகள் பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. 4 பதவிகள் பொதுபெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 3 பதவிகள் பொதுப் போட்டிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

ஊராட்சித் தலைவர்களில் மொத்தம் உள்ள 274 பதவிகளில்ஒரு பதவி பழங்குடி பெண்களுக்கும், 3 பதவிகள் பழங்குடியினர் பொதுவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. 49 பதவிகள் பட்டியலின பெண்களுக்கும், 46 பதவிகள் பட்டியலின பொதுப் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. 87 பதவிகள் பொதுப் பிரிவு பெண்களுக்கும், 88 பொதுப் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுஉள்ளன.

செங்கல்பட்டு மாவட்டத்தில் புனித தோமையார் மலை, காட்டாங்கொளத்தூர், மதுராந்தகம், சித்தாமூர், லத்தூர், அச்சிறுப்பாக்கம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடைபெறுகிறது.

செங்கை மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்கள், 359 கிராம ஊராட்சிகள், 2,679 கிராம ஊராட்சி வார்டுகள், 154 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், ஒரு மாவட்ட ஊராட்சி, 16 மாவட்ட ஊராட்சி வார்டுகள் உள்ளன. இதற்காக 2,034 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 11,54,933 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்குப்பதிவு அலுவலர்களாக 16,208 பேர் பணியில் ஈடுபட உள்ளனர்.

இந்த தேர்தலில் வாக்காளர்கள் ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகிய 4 பதவிகளுக்கு வாக்களிக்க வேண்டும். ஊரக தேர்தலில் வாக்குச்சீட்டு முறைப்படியே தேர்தல் நடத்தப்படும்.

செங்கை மாவட்டத்தில் முதல்கட்டமாக லத்தூர், புனித தோமையார் மலை, திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு 6-ம் தேதிதேர்தல் நடைபெறும். இரண்டாம் கட்டமாக அச்சிறுப்பாக்கம், சித்தாமூர் காட்டாங்குளத்தூர், மதுராந்தகம் ஆகிய ஒன்றியங்களுக்கு 9-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

திருவள்ளூர் மாவட்டம்

இதேபோல, திருவள்ளூர் மாவட்டத்தில் ஆலாடு, திருவெள்ளவாயல், கொசவன்பாளையம், தாமனேரி ஆகிய 4 ஊராட்சித் தலைவர் பதவிகள், பூண்டி, சோழவரம், திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 4 வார்டுஉறுப்பினர் பதவிகள், கும்மிடிப்பூண்டி, கடம்பத்தூர், திருத்தணி உள்ளிட்ட 11 ஒன்றியங்களுக்கு உட்பட்ட 27 ஊராட்சிகளில் 30 வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தம் 38 பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் அக். 9-ல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x