

பெரியகுளத்தில் முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி மறைவுக்கு அஞ்சலி செலுத்த அவரது வீட்டுக்கு வந்த பாஜக தலைவர்களை, சிலர் தாக்க முயன்றதாக பெரிய குளம் டிஎஸ்பியிடம் புகார் அளிக் கப்பட்டது.
அதிமுக ஒருங்கிணைப் பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல் நலக்குறைவால் கடந்த ஒன்றாம் தேதி சென்னையில் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கடந்த 12-ம் தேதி பா.ஜ.க தமிழக தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பாஜக சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் எம்.பி சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பெரியகுளம் வந்தனர்.
பெரியகுளம் பழைய பஸ் நிலையம் அருகே வந்தபோது சிலர் இவர்களது வாகனங்களை தாக்க முயன்றனர்.
இதுகுறித்து பாஜக விவசாய அணியின் மாநிலத்தலைவர் ஜிகே.நாகராஜ் பெரியகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்துக்குமாரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
இது குறித்து ஜிகே.நாகராஜ் கூறுகையில், வாகனங்களை சிலர் தாக்க முயன்றது குறித்த வீடியோ ஆதாரம் போலீஸாரிடம் உள்ளது. அவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.