

உலக வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்க்கும் கட்சிகளுக்கே வணிகர் சங்கங்களின் பேரவை ஆதரவு தெரிவிக்கும் என்று அதன் தலைவர் த.வெள்ளையன் கூறியுள்ளார்.
சென்னையில் நிருபர்களி டம் அவர் நேற்று கூறியதாவது:
உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது மிகப்பெரிய தவறாகும். இதன் மூலம், இந்தியா தனது வணிக உரிமையை வெளி நாட்டு கார்ப்பரேட் நிறுவனங் கள் மற்றும் வல்லாதிக்க நாடுகளிடம் ஒப்படைத் துள்ளது. இவை இந்திய வணி கர்கள் குறிப்பாக, சிறு வியா பாரிகளை பெரிதும் பாதிக்கக் கூடியவை. எனவே, உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா விலக வேண்டும்.
உலக வர்த்தக ஒப்பந்தத்தை தமிழகத்தில் செயல்படுத்த விடமாட்டோம். அந்த ஒப்பந் தத்தை செயல்படுத்த மத்திய அரசுக்கு ஒத்துழைக்க மாட் டோம் போன்ற வாக்குறுதி களை அளிக்கும் கட்சிகளுக்கே இந்தத் தேர்தலில் எங்கள் அமைப்பு ஆதரவு அளிக்கும்.
மேலும், உலக வர்த்தக ஒப்பந்தத்தின் தீமைகளை எடுத்துரைக்கும் வகையில் மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலையில் தொடங்கி கன்னியாகுமர் திருவள்ளூர் சிலை வரை விழிப்புணர்வு பைக் பயணம் மேற்கொள்ள உள் ளோம். இந்த பயணம் வரும் 1-ம் தேதி தொடங்கவுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
உலக வர்த்தக ஒப்பந் தத்தை வைகோ, திருமாவள வன் போன்றவர்கள் எதிர்த்து வருவதால் மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பீர் களா என்று கேட்டபோது, அதற்கு வெள்ளையன் பதில ளிக்கவில்லை.