நீட் தேர்வு எழுதி மன உளைச்சலில் இருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை

கனிமொழி: கோப்புப்படம்
கனிமொழி: கோப்புப்படம்
Updated on
1 min read

அரியலூர் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி - ஜெயலட்சுமி தம்பதியினரின் மகள் கனிமொழி (17). பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 562 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவி கனிமொழி, நீட் தேர்வை கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப். 12) எழுதியுள்ளார்.

இந்நிலையில், நீட் தேர்வு கடினமாக இருந்ததால் சரியாக எழுதவில்லை என தந்தையிடம் கூறி மன உளைச்சலில் இருந்த மகள் கனிமொழியை தந்தை தேற்றியுள்ளார். எனினும், மருத்துவக் கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் நேற்று இரவு (செப். 13) தனிமையில் வீட்டில் இருந்த கனிமொழி வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வெளியில் சென்றிருந்த கருணாநிதி மற்றும் ஜெயலட்சுமி வீட்டுக்கு வந்து பார்த்தபோது, கனிமொழி தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருணாநிதி வழக்கறிஞராக உள்ளார். கனிமொழிக்கு உடன்பிறந்த சகோதரி கயல்விழி (19), பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் 2-ம் ஆண்டு பயின்று வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in