

தமிழகத்தில் 2 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
‘‘14-ம் தேதி நீலகிரி, கோவை,தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி,மின்னலுடன் கனமழையும், திருப்பூர், தென்காசி மாவட்டங்கள், அதை ஒட்டிய உள் மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங் களில் ஓரிரு இடங்களில் இடி,மின்னலுடன் லேசான மழையும் பெய்யக் கூடும்.
15-ம் தேதி கோவை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும், நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி,தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும் பெய்யக் கூடும்’’ என்று கூறப்பட்டுள்ளது.