4 வழித்தடங்களில் இரட்டை ரயில் பாதை - திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் தொடக்கம்

4 வழித்தடங்களில் இரட்டை ரயில் பாதை - திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் தொடக்கம்

Published on

தமிழகத்தில் திருச்சி - ஈரோடு உள்ளிட்ட 4 வழித்தடங்களில் இரட்டை ரயில் பாதைகள் அமைப்பதற்கான திட்ட அறிக்கையைத் தயாரிக்கும் பணிகளை தெற்கு ரயில்வே தொடங்கியுள்ளது.

மாநிலங்களின் மக்கள் தொகை அடிப்படையில் பிரதான ரயில்வே திட்டங்களை செயல்படுத்த ரயில்வே சார்பில் ஆய்வு நடத்தப்படுகிறது. அதன் முடிவுகளுக்கு ஏற்ப திட்டங்களைச் செயல்படுத்த ரயில்வே வாரியம் ஒப்பதல் அளித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ரயில் போக்குவரத்து தேவை அதிகரித்துள்ள திருச்சி - ஈரோடு, சேலம் - கரூர்,கரூர் - திண்டுக்கல், விழுப்புரம் - காட்பாடி ஆகிய 4 வழித்தடங்களில் இரட்டை ரயில் பாதைகள் அமைப்பதற்கான பணிகளை தெற்கு ரயில்வே தொடங்கியுள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் கூறியதாவது:

கரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பெரும்பாலான ரயில்கள் மீண்டும் இயக்கப்படுகின்றன. அதேபோல், புதிய ரயில் பாதைகள்,இரட்டை பாதைகள் அமைப்பதற்கான பணிகளும் முழு வீச்சில்நடந்து வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் 4 வழித்தடங்களில் இரட்டை ரயில் பாதைகள்அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருச்சி - ஈரோடு, சேலம் - கரூர், கரூர் - திண்டுக்கல், விழுப்புரம் - காட்பாடி ஆகிய 4வழித்தடங்களில் இரட்டை ரயில்பாதை அமைப்பதற்கு விரிவானதிட்ட அறிக்கையைத் (டிபிஆர்) தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ளோம். இப்பணி 6 மாதங்களில்முடிவடையும். அதன்பிறகு, ரயில்வே வாரியம் முடிவு செய்து,மத்திய பட்ஜெட்டில் இந்த திட்டங்கள் செயல்படுத்துவதற்கான நிதியை ஒதுக்கி அறிவிக்கும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in