ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன்: முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

தமிழகத்தில் இருந்து விடைபெற்று பஞ்சாப் ஆளுநராகப் பொறுப்பேற்கும் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
தமிழகத்தில் இருந்து விடைபெற்று பஞ்சாப் ஆளுநராகப் பொறுப்பேற்கும் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
Updated on
1 min read

பஞ்சாப் மாநில ஆளுநராக அறிவிக்கப்பட்டுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

கடந்த 4 ஆண்டுகளாக தமிழக ஆளுநராக இருந்துவரும் பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். சில நாட்களில் அவர் பஞ்சாப் ஆளுநராகப் பதவியேற்க இருக்கிறார். நாகாலாந்து ஆளுநராக இருந்துவரும் ஆர்.என்.ரவி, தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் தனது பணிகளை முடித்துக்கொண்டு ஆளுநர் புரோஹித் இன்று காலை 8.30 மணிக்கு பஞ்சாப் தலைநகர் சண்டிகர் புறப்படுகிறார். இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் புரோஹித்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று மாலை 6.15 மணி அளவில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு, தலைமைச் செயலர் இறையன்பு உடன் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in