தமிழகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்: மத்திய அமைச்சருக்கு கருணாநிதி கடிதம்

தமிழகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்: மத்திய அமைச்சருக்கு கருணாநிதி கடிதம்
Updated on
1 min read

தமிழகத்தில் கிடப்பில் உள்ள திட்டங் களுக்கு வரும் ரயில்வே பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளித்து நிறை வேற்ற வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ரயில்வே அமைச் சர் சுரேஷ் பிரபுவுக்கு நேற்று அனுப் பிய கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

ரயில்வே துறையை ஒரு பொறுப் புள்ள நிறுவனமாக மாற்ற தாங்கள் எடுத்துவரும் முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள் கிறேன். நிதிப் பற்றாக்குறை, நிலம் கையகப்படுத்துதலில் ஏற்படும் பிரச் சினைகள் உள்ளிட்ட காரணங் களால் தமிழகத்துக்கு அறிவிக்கப் பட்ட பல ரயில்வே திட்டங்கள் நிறை வேற்றப்படாமல் கிடப்பில் போடப் பட்டுள்ளன. இது மிகவும் வேதனை அளிக்கிறது.

சென்னை கடற்கரை - கொருக் குப்பேட்டை 3-வது பாதை, சென்னை சென்ட்ரல் - பேசின் பாலம் 5-வது, 6-வது பாதை, அத்திப்பட்டு - புத்தூர் 83 கி.மீ. நீள புதிய பாதை, சென்னை கடற்கரை - அத்திப்பட்டு 4-வது பாதை ஆகிய திட்டங்கள் சென்னை மாநகரில் ஏற்படும் நெரிசலைக் குறைப்பதற்காக தொடங்கப்பட்டன. ஆனால், பல்வேறு காரணங்களால் இந்தத் திட்டங்கள் தற்போது கைவிடப்பட்டுள்ளன.

மற்ற முக்கிய திட்டங்களான கும்பகோணம் - திருவாரூர், ஓமலூர் - மேட்டூர் அணை, ஈரோடு - பழனி, ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி, அருப்புக்கோட்டை வழியாக மதுரை - தூத்துக்குடி, பெங்களூரு - சத்தியமங்கலம், திண்டிவனம் - திரு வண்ணாமலை, மதுரை - போடி நாயக்கனூர், மாமல்லபுரம் வழியாக சென்னை - கடலூர், திண்டிவனம் - நகரி ரயில்வே பாதை திட்டங்கள் 1996-97, 1998-99ம் ஆண்டுகளில் அறிவிக்கப்பட்டன.

இவற்றில் சில திட்டங்களுக்கான மதிப்பீடு மற்றும் முதல்கட்ட ஆய்வுகள் முடிந்த நிலையில் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

எனவே, வரும் ரயில்வே பட்ஜெட் டில் போதிய நிதி ஒதுக்கி தமிழகத் தில் அறிவிக்கப்பட்டு கிடப்பில் உள்ள திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கருணாநிதி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in