

மக்கள் நலக் கூட்டணிக்கு வருமாறு விஜயகாந்த், ஜி.கே.வாசன் ஆகியோருக்கு அழைப்பு விடுத்தது ஏன்? என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சி.மகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் காரைக்குடியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த காலத்தில் எந்த அரசியலை பேசினாரோ அந்த அரசியலைத்தான் மக்கள் நலக் கூட்டணி முன்னெடுத்துச் செல்கிறது. ஆகவேதான் அவரை அழைக்கிறோம். அவரைப் போன்று சமுதாயத்தில் பலமாற்றங்களைக் கொண்டு வருகிற தலைவராக தமாகா தலைவர் ஜி.கே. வாசன் உள்ளார். நேர்மையான அரசியலில் அவர் உள்ளதால் அவரையும் இக்கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்றார்.