திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு

ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை ஆட்சியர் அமர் குஷ்வாஹா இன்று வெளியிட்டார்.
ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை ஆட்சியர் அமர் குஷ்வாஹா இன்று வெளியிட்டார்.
Updated on
1 min read

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் 8 வாக்குச்சாவடிகள் புதிதாக உருவாக்கப்பட்டு அதற்கான பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா இன்று வெளியிட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

”இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின் பேரில் 2022-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாகக் கருத்தில் கொண்டு சிறப்பு சுருக்க திருத்தம் 2022-ம் ஆண்டுக்கான முன்னேற்பாடாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தின் எண்ணிக்கை 1030-ல் இருந்து தற்போது 1,038 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது வெளியிடப்படும் வரைவு வாக்குச்சாவடி பட்டியல்களில் ஏதேனும் மாற்றங்கள் வேண்டுமென்றால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் தங்களது கருத்துகளை வரும் 20-ம் தேதிக்குள் எழுத்துபூர்வமாகத் தெரிவிக்கலாம்.

கருத்தும் ஏதும் வரப்பெறாத நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்குச்சாவடி பட்டியலே இறுதியானது என முடிவு செய்யப்படும்’’.

இவ்வாறு ஆட்சியர் அமர் குஷ்வாஹா பேசினார்.

நிகழ்ச்சியில், திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலர்மேல்மங்கை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வில்சன் ராஜசேகர், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

புதிதாக உருவாக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களின் விவரம்:

வ.எண் தொகுதி பெயர் பழைய வாக்குச்சாவடி புதிய வாக்குச்சாவடி மொத்தம்

1. வாணியம்பாடி 256 03 259

2. ஆம்பூர் 242 03 245

3. ஜோலார்பேட்டை 267 -- 267

4. திருப்பத்தூர் 265 02 267

---------------------------------------------------------------------------------

மொத்தம் 1030 08 1038

-----------------------------------------------------------------------------------

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in