Published : 10 Feb 2016 08:25 AM
Last Updated : 10 Feb 2016 08:25 AM

கருணாநிதியுடன் பரூக் அப்துல்லா சந்திப்பு

திமுக தலைவர் கருணாநிதியை காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா நேற்று மாலை சந்தித்துப் பேசினார்.

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற் பதற்காக சென்னை வந்த பரூக் அப்துல்லா, கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். அப்போது திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் கனிமொழி, திமுக செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பரூக் அப்துல்லா, ‘‘இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரான கருணாநிதி எனது நீண்டகால நண்பர். சென்னை வரும்போதல்லாம் அவரை சந்திப்பது வழக்கம். அந்த அடிப்படையில் அவரை சந்தித்து நலம் விசாரித்தேன். அவரும் எனது உடல் நலம் குறித்து விசாரித்தார். வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சிறப்பான இடத்தைப் பெறும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x