Published : 12 Sep 2021 15:31 pm

Updated : 12 Sep 2021 15:31 pm

 

Published : 12 Sep 2021 03:31 PM
Last Updated : 12 Sep 2021 03:31 PM

தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

ips-officers-transferred-in-tn

தமிழகத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் இறையன்பு இன்று பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு:

மாற்றப்பட்ட அதிகாரிகளும் அவர்கள் முன்பு வகித்த பதவிகள்:

* சென்னை பெருநகர கிழக்கு போக்குவரத்து துணை ஆணையர் கே.பாலகிருஷ்ணன் திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.யாக இருந்த சிபி சக்ரவர்த்தி சென்னை சைபர் குற்றப்பிரிவு எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

* சென்னை சைபர் குற்றப்பிரிவு எஸ்.பி.யாக இருந்த ஓம்பிரகாஷ் மீனா சென்னை பெருநகர் கிழக்கு போக்குவரத்து துணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* தூத்துக்குடி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளராக சந்தீஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

* திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சப் டிவிஷன் துணை காவல் கண்காணிப்பாளராக ரஜத் ஆர் சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார்.

* கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் சப் டிவிஷன் துணை காவல் கண்காணிப்பாளராக அங்கித் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார்.

* திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சப் டிவிஷன் துணை காவல் கண்காணிப்பாளராக வி.வி.சாய் பிரணீத் நியமிக்கப்பட்டுள்ளார்.

* விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சப் டிவிஷன் துணை காவல் கண்காணிப்பாளராக அபிஷேக் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

* திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் கிராமப்புறம் துணை காவல் கண்காணிப்பாளராக அருண் கபிலன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தவறவிடாதீர்!



IPS officers transferred in TN9 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்தமிழக அரசு உத்தரவுகே.பாலகிருஷ்ணன்சிபி சக்ரவர்த்திஓம்பிரகாஷ் மீனாசந்தீஷ்ரஜத் ஆர் சதுர்வேதிஅங்கித் ஜெயின்வி.வி.சாய் பிரணீத்அபிஷேக் குப்தாஅருண் கபிலன்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x