குரு புக் சென்டர், ‘இந்து தமிழ் திசை’ சார்பில் காஞ்சிபுரத்தில் நாளை முதல் புத்தகக் காட்சி தொடக்கம்: அக்டோபர் 10-ம் தேதி வரை நடக்கிறது

குரு புக் சென்டர், ‘இந்து தமிழ் திசை’ சார்பில் காஞ்சிபுரத்தில் நாளை முதல் புத்தகக் காட்சி தொடக்கம்: அக்டோபர் 10-ம் தேதி வரை நடக்கிறது
Updated on
1 min read

காஞ்சிபுரம் குரு புக் சென்டர், ‘இந்து தமிழ் திசை’ சார்பில் நாளை (செப்.13-ம் தேதி) முதல் அக்டோபர் 10-ம் தேதி வரை சிறப்பு புத்தகக் காட்சி நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் சித்ரகுப்த சுவாமி கோயில் எதிரே நெல்லுக்கார தெருவில் அமைந்துள்ள குரு புக் சென்டரில் இந்த புத்தகக் காட்சி தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.

இதில் சிறப்பு சலுகையாக அனைத்து புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி வழங்கப்படும்.

ரூ.500-க்கு மேல் புத்தகம் வாங்கும் 3 நபர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து, பரிசும் வழங்கப்படுகிறது. முதல் பரிசு ரூ.1,000, இரண்டாம் பரிசு ரூ.500, மூன்றாம் பரிசு ரூ.250 வழங்கப்படும்.

கூடுதல் விவரங்களை 98423 16661 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு அறிந்துகொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in