

தமிழகத்தில் அடுத்த மாதம்தொடங்க உள்ள வடகிழக்குப் பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் தலைமைச் செயலர் வெ.இறையன்பு நேற்று ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழை காலமாகும். இந்த மழைக்காலத்தில் அதிக அளவில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, புயல்ஆகியவை உருவாகும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.
முதல் கட்டமாக, தலைமைச் செயலர் வெ.இறையன்பு தலைமையில், நேற்று ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில், வருவாய் நிர்வாக ஆணையர் க.பனீந்திர ரெட்டி, வருவாய் துறை செயலர்,பொதுத்துறை செயலர் ஜெகந்நாதன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.