Published : 10 Sep 2021 02:53 PM
Last Updated : 10 Sep 2021 02:53 PM

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று (செப். 10) வெளியிட்ட அறிவிப்பு:

"தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய (கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி) மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணிநேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

ஏற்காடு (சேலம்) 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

மத்திய வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணிநேரத்தில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது அடுத்த 48 மணிநேரத்தில் மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுப்பெற கூடும். இதன் காரணமாக,

வங்கக்கடல் பகுதிகள்:

10.09.2021 முதல் 11.09.2021 வரை: மத்திய வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

12.09.2021 முதல் 14.09.2021: வடக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடல் பகுதி, ஒரிசா, மேற்கு வங்க கடலோர பகுதி, வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ. வீசக்கூடும்.

மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அரபிக்கடல் பகுதிகள்:

10.09.2021 முதல் 14.09.2021 வரை: தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்".

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x