

விநாயகர் சதுர்த்தியையொட்டி தேசிய விடுமுறை நாளான இன்று, ஞாயிறு காலஅட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அலுவலக நாட்களில் மொத்தம் 650 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பயணிகள் வருகை குறைவாக இருக்கும் என்பதால் 500 மின்சார ரயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று (செப்.10) தேசிய விடுமுறை என்பதால் ஞாயிறு காலஅட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.