Published : 16 Feb 2016 09:03 AM
Last Updated : 16 Feb 2016 09:03 AM

திமுக, அதிமுக-வுக்கு எதிராகவே பிரச்சாரம்: இந்திய கம்யூனிஸ்ட் சுதாகர் ரெட்டி திட்டவட்டம்

சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக.வுக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்படும் என இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன் கனிக்கோட்டை பேருந்து நிலையம் அருகே புதியதாக கட்டப்பட்டுள்ள, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் திறப்பு விழா மற்றும் கட்சியின் 90-வது ஆண்டு நிறைவு நாள் பேரணி நடந்தது. இந்தப் பேரணியில் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி கலந்து கொண்டார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

தமிழகத்தில் மக்கள் நலக் கூட்டணிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு எதிராகவே பிரச்சாரம் மேற்கொள் ளப்படும். அதிமுகவுடன், பாஜக கூட்டணி சேர உள்ளதாக பத்திரி கைகளில் செய்தி வெளியாகி உள்ளது. பாஜகவுடன் கூட்டணி சேரும் எந்த கட்சியும் வெற்றி பெறாது.

டெல்லி, பிஹார், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக செல்வாக்கை இழந்து விட்டது. காங்கிரஸ் கட்சி, 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் திமுகவை கண்டிக்க தவறியதால் அக்கட்சி செல்வாக்கை இழந்து விட்டது. தற்போது மீண்டும் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி சேர்ந்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கூட்டணியை உடைக்க முடியாது

நிகழ்ச்சியில் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறிய தாவது: மக்கள் நல கூட்டணிக்கு தேமுதிக வந்தால் வரவேற்போம். மக்கள் நல கூட்டணி தனித்து நின்றால், வாக்குகள் பிரிந்து அதி முகவுக்கு சாதகமாகிவிடும் என திமுக நினைக்கிறது. சட்ட மன்றத் தேர்தலில் மக்கள் நல கூட்டணிக்கும், அதிமுகவுக்கும் தான் நேரடி போட்டி. இக்கூட்ட ணியில் இன்னும் சில கட்சிகள் சேரும். மக்கள் நல கூட்டணியை உடைக்க முயற்சி நடக்கிறது. ஆனால் எங்களது கூட்டணியை உடைக்க முடியாது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x