

தமிழக காவல்துறையில் பணிபுரி யும் அருள் உள்ளிட்ட 4 போலீஸார், தங்களுக்கு எஸ்ஐ தேர்வில் உடல்தகுதி உள்ளிட்ட அனைத்துத் தேர்வுகளிலும் விலக்கு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதன்படி அவர்களுக்கு உடல்தகுதித் தேர் வில் விலக்கு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், நேர்முகத் தேர் வில் அவர்கள் தேர்ச்சி பெற வில்லை. இதையடுத்து தமிழ் வழி யாக பயின்றவர்களுக்கு இடஒதுக் கீட்டில் 20 சதவீதம் முன்னுரிமை வழங்குவதுபோல, போலீஸில் பணி புரியும் தங்களுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் என கோரினர்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்யநாராயணா கொண்ட முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘‘புதிதாக தேர்வு எழுதுபவர் களுக்கு மட்டுமே இந்த முன்னு ரிமை பொருந்தும். பணியில் உள்ளவர் களுக்கு பொருந்தாது’’ என தீர்ப்பளித்தனர்.