Published : 09 Sep 2021 10:30 PM
Last Updated : 09 Sep 2021 10:30 PM

செப்.12ல் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்களை அறிந்துகொள்ள இணையதளம், தொலைபேசி எண்கள்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னையில் வரும் 12ஆம் தேதி தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்களை அறிந்துகொள்ள ஏதுவாக இணையதளத்தில் விவரங்கள் பதிவேற்றப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர மாநகராட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக மக்கள் அனைவரையும் கோவிட் தொற்று நோயிலிருந்து பாதுகாக்கும் வகையில் அனைவருக்கும் தடுப்பூசி விரைந்து செலுத்தப்பட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தடுப்பூசிகள் பல்வேறு சிறப்பு முகாம்கள் மூலம் செலுத்தப்பட்டு வருகிறது.

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே முழுமையான கோவிட் தொற்றை தடுக்க முடியும் என்ற நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி எதிர்வரும் 12.09.2021 அன்று 1600 தீவிர தடுப்பூசி முகாம்கள் நடத்த திட்டமிட்டு சுமார் 3.50 இலட்சம் தடுப்பூசிகள் செலுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதன்படி 1600 தடுப்பூசி முகாம்கள் அமைந்துள்ள இடங்களின் விவரங்களை பொதுமக்கள் எளிதில் அறிந்துகொள்ளூம் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 12.09.2021 அன்று நடைபெறவுள்ள 1,600 கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைந்துள்ள இடங்களை பொதுமக்கள் https://chennaicorporation.gov.in/gcc/covid-details/mega_vac_det.jsp என்ற மாநகராட்சியின் இணையதள இணைப்பின் வாயிலாகவும், 044 - 2538 4520, 044 - 4612 2300 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டும் தெரிந்துகொள்ளலாம்.

எனவே, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இந்தச் சிறப்பு முகாமினை பயன்படுத்தி கோவிட் தடுப்பூசி செலுத்திகொண்டு கோவிட் நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளும்படிகேட்டுகொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x