

234 தொகுதிகளிலும் காங் கிரஸ் கட்சி தனித்து போட்டி யிட வேண்டுமென்று கட்சித் தொண்டர்கள் விரும்புகிறார் கள் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் 10 ஆண்டு சாதனைகளைப் பற்றிய கருத்தரங்கம் நேற்று சத்தியமூர்த்தி பவனில் நடை பெற்றது.
கருத்தரங்குக்கு தலைமை யேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேசியதாவது:
கிராமப்புற மக்களின் வாழ்க் கைத் தரத்தை மேம்படுத்த வேண்டுமென்கிற உயரிய நோக்கில் 2006-ம் ஆண்டு மத்தியில் ஆட்சியிலிருந்த மன்மோகன் சிங் தலைமை யிலான காங்கிரஸ் கட்சி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தைக் கொண்டு வந்தது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததும், நாட்டின் பல பகுதிகளில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை செயல்படாமல் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
மேலும், இத்திட்டத்தின் மூல மாக வயதானவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் நல்ல பலனை அடைந்து வந்தார்கள். தமிழகத் தில் மட்டும் 94 லட்சம் பேர் இத்திட்டத்தினால் பலனடைந்து வந்தார்கள். இத்திட்டத்தை பிஜேபி அரசு முடக்குவதனால் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் பறிபோய்விடும் நிலை உருவாகும்.
சென்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மீது பாஜகவினர் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, வெற்றி பெற்றனர். ஆனால், பாஜக மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்று இரு ஆண்டுகள் முடிவதற்குள் மக்களுக்கு எந்த நல்ல திட்டத்தையும் செய்யாத அரசு இது என்பதை மக்கள் உணர்ந்து கொண்டார்கள்.
நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்கான முழுமையான நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் எடுக்க வேண்டும். 234 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட வேண்டுமென்று கட்சித் தொண்டர்கள் விரும்புகிறார்கள். ஆனாலும், எங்கள் கட்சித் தலைமை என்ன முடிவெடுக்கிறது என்பதை பொறுத்தே காங்கிரஸ் கட்சியின் தேர்தல் கூட்டணி அமையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கருத்தரங்கில், கட்சியின் துணைத்தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம், பொருளாளர் டாக்டர் நாசே ஜெ.ராமச்சந்திரன், எஸ்சி பிரிவு பொறுப்பாளர் கு.செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.